இல்லாது போகப் போகும் 
   ஒன்றுக்காய் நான் ஏன் இப்படி 
         அடித்துக் கொள்ள வேண்டும் ...
தெரிந்தே நான் ஏன் மீண்டும் மீண்டும்  
        ஆசைப்படுகிறேன் ...           
நேர்மறையாக இருக்க வேண்டும் 
     என்பதை ஒரு வேளை தவறாய்
         எடுத்துக் கொள்கிறேனோ ????
  மீண்டும் மீண்டும்  உன்னிடம் தோற்கிறேன் 
      ஆனாலும் களத்திற்கு எந்த நம்பிக்கையில் 
          திரும்பி வருகின்றேன் .
அலசி ஆராய்ந்தால் , உன் நினைவுகளை நீ எனக்கு
  லஞ்சமாக அளித்து சென்று விட்டாய் என்று  அறிந்து கொள்கிறேன் .
லஞ்சம் வாங்கியவன் என்றுமே திருந்துவதில்லையாம் .....
நீயும் , நானும்  என்றோ சேர்ந்து படித்த பாடம் ....
நீ கொடுத்த லஞ்சம் மட்டுமே என்னை களத்திற்கு திரும்ப 
அழைத்து வருகிறது .....
உன் லஞ்சத்தில் என் நினைவலைகள் ....
 
 
இன்னும் சரியாய் புரியல என் அருமை சகோதரா!
ReplyDelete