Wednesday 11 May, 2011

முதல் முறையாய்

 முதல் முறையாய் 
         வெள்ளைப் பீடி குடித்த பொழுது
            தம்பிக்காகவும் தம்பியின் தோழர்களுக்கு ஆகவும்  பயம்.

முதல் முறையாய் 
          டாஸ்மாக்கினுள் நுழைந்த பொழுது 
            அப்பாவுக்கும், அப்பாவின் தோழர்களுக்கு ஆகவும்  பயம்.

முதல் முறையாய் 
          அவளுடன் வெளியே சென்ற பொழுது 
               மாமாவுக்கும் , மாமாவின் முகம் அறிந்த அவர் தோழர்களுக்கு ஆகவும்  பயம்..

முதல் முறையாய் 
           அவளுடன் கோயிலுக்கு சென்ற பொழுது 
               அம்மாவுக்கும், அம்மாவின் முகம் அறிந்த தோழிகளுக்கு ஆகவும்  பயம்..

முதல் முறையாய் 
            அங்கே சில படங்கள் பார்த்த பொழுது
               தாத்தாவுக்கும், அவரின் தோழர்களுக்கு ஆகவும் பயம்..

இப்படியாக
   
முதல் முறையாய் 
       சிறு கதை போல் 
         முடியும் என நினைத்தவை 
இன்றெல்லாம் நெடுந்தொடராய் நீடிக்க படுகின்றன.....

No comments:

Post a Comment