Sunday 22 August, 2010

பொன்னுச்சாமி வாத்தியார்

உங்களுக்கு கிடைத்த பாக்கியங்களை போலவே,
     எனக்கும் கிட்டியது சில பல !

மஞ்சள் பையில் தகரச் சிலேட்டும் 
    'காலணா' மாங்காய் கீற்றுடனும்  
தொடங்கிய என் பள்ளி பயணத்தில் 
     பொன்னுச்சாமி வாத்தியார் மிக முக்கியமானவர்..

ஒண்ணாம் வகுப்பில் நான் அழாமல் 

பள்ளிக்கூடம் சென்றதை பல பேரிடம் சொல்லி 
பெருமை பட்டுக் கொள்கிறாள் அம்மா...
எதுவுமே தெரியாமல் இருந்த எனக்கு 
நாட்டுப்பண் இசைத்தால் நிற்க வண்டும் என தெரியவில்லை...


முடியும் முன் நான் வீட்டுக்கு வந்ததை 
அம்மாவிடம் குறையாகச் சொன்னார் வாத்தியார் 

அடுத்த நாள் 'நான் முழுவதுமாய் நின்றேன் 
முடியும் வரை'

அவர் பண்ணின்  பாதியிலேயே ஓடி விட்டார் 
பேருந்தை பிடிக்க 

மறுநாள் இது குறித்து கேட்டால் 

முறைப்புடன் என்னை பார்த்து 
'நீ' அதிகம் பேசுகிறாய் என்கிறார் .

No comments:

Post a Comment